பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர்-அரியலூரில் சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்,
சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக் கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ஆனந்தராசு தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் வள்ளியம்மை, சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தொடக்க உரையாற்றினார். சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை செயலாளர் சவிதா விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் கொளஞ்சி வரவேற்றார். முடிவில் பொருளாளர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.
இதேபோல் அரியலூர் அண்ணா சிலை அருகே அரியலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி, மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தொடக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story