நண்பரை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை ஓரினச்சேர்க்கையால் விபரீதம்
ஓரினச்சேர்க்கையால் நண்பரை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை,
சென்னை பூங்கா நகரை சேர்ந்த ஜலகேஷ்குமார் சாகா என்பவர் அண்ணாசாலை ரிச்சிதெருவில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சரவணன்(30), கோவிந்தன் தெருவை சேர்ந்த பிரபு(28) ஆகிய 2 பேர் வேலை பார்த்து வந்தனர்.
இருவரும் நெருங்கிப்பழகி வந்தனர். அவர்கள் ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுபற்றி பிரபுவின் வீட்டுக்கு தெரியவந்ததும் அவரை கண்டித்தனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு சரவணன் வேலைபார்க்கும் கடையில் இருந்து பிரபு நின்றுவிட்டார்.
இந்தநிலையில் பிரபுவிடம் மீண்டும் உறவை தொடர வேண்டும் என்பதில் சரவணன் ஆர்வமாக இருந்தார். தன்னை கடையில் வந்து சந்திக்குமாறு பிரபுவிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவந்தார். அதன்படி சரவணனை பார்ப்பதற்காக பிரபு நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றார்.
அப்போது பிரபுவை ஓரினச்சேர்க்கைக்கு சரவணன் அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன் கடையில் இருந்த கத்தியை எடுத்து பிரபுவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் போலீஸ் விசாரணைக்கு பயந்து சரவணனும் கடையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வழக்கம்போல பெண் ஊழியர் நேற்று காலை கடையை திறந்தபோது பிரபும், சரவணனும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story