காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்சத்துணவு மானிய கோரிக்கையின்போது 110 விதியின்கீழ் காலமுறை ஊதியம், முறையான ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாலை சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அதன்படி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளை சார்பில் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் எலிசபெத்ராணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் திலகவதி, சாந்தி, மல்லிகா, இணை செயலாளர்கள் ஜெயராஜ், சேட் முகமது, அமுதா, பொருளாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத்தலைவர் பெரியசாமி தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கென்னடி, தமிழ்ச்செல்வி உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம், முறையான ஓய்வூதியம் வழங்க கோரி கோஷம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டம் குறித்து நிர்வாகிகள் கூறுகையில்,“இந்தியாவில் வெற்றித்திட்டமாக தடையின்றி நடைபெறும் பெரிய திட்டம் சத்துணவு திட்டம். இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நிலையோ நாளுக்கு நாள் போராட்டமாக உள்ளது. 7-வது ஊதியக்குழுவில் தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவித்த காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டம் சார்ந்த கோரிக்கைகள் மறுக்கப்பட்டுள்ளது. அவற்றை அரசு நிறைவேற்றித்தர வேண்டும்” என்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story