வேளாங்கண்ணி- செருதூர் இடையே வெள்ளையாற்றின் குறுக்கே ரூ.15 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு
வேளாங்கண்ணி-செருதூர் இடையே வெள்ளையாற்றின் குறுக்கே ரூ.15 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வேளாங்கண்ணிக்கு பக்கத்தில் செருதூர் என்ற மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் வேளாங்கண்ணிக்கு சென்று மீன் விற்பனை உள்பட பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். அதேபோல் வேளாங் கண்ணி பொதுமக்களும் செருதூருக்கு சென்று வருவது வழக்கம். ஆனால் வேளாங்கண்ணிக்கும், செருதூருக்கும் இடையே வெள்ளையாறு ஓடுகிறது. இதனால் செருதூரில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்று அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கால விரயமும் ஏற்பட்டு வந்தது.
மேலும், செருதூருக்கு அருகில் உள்ள கிராமங்களான பிரதாபராமபுரம், காமேஸ்வரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்களும் சுற்றி சென்று வந்தனர். எனவே, வேளாங்கண்ணி, செருதூர் உள்ளிட்ட கிராம மக்கள் வேளாங்கண்ணி - செருதூரை இணைக்கும் வகையில் வெள்ளையாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு செருதூர் அருகே வெள்ளையாற்றின் குறுக்கே ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பாலம் கட்டுமான பணி முடிவடைந்தது. இதை தொடர்ந்து பாலம் திறப்பு நேற்று நடைபெற்றது. புதிய பாலத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story