மத்திய அரசு அதிகாரி வேலை
பல்வேறு மத்திய அரசு துறைகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யூ.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மத்திய வேளாண்மைத் துறையில் அனிமல் ஹஸ்பண்டரி பிரிவில் இயக்குனர், கடற்படையில் என்ஜினீயரிங் சீனியர் டிசைன் ஆபீசர், குடும்ப நலத்துறையில் உதவி பேராசிரியர் (நெப்ராலஜி மற்றும் பீடியாட்ரிக்ஸ், யுயானி) , விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 65 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வெட்னரி சயின்ஸ், அனிமல் ஹஸ்பண்டரி, மெக்கானிக்கல், மரைன் என்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ்., யுனானி மெடிசின் மற்றும் பி.இ. பி.டெக் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். அதிகபட்சம் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15-6-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Related Tags :
Next Story