நாகர்கோவிலில் கிராமிய அஞ்சல்துறை ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
நாகர்கோவிலில் கிராமிய அஞ்சல்துறை ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் 15 நாளில் ரூ.75 கோடி பணப்பரிவர்த்தனை முடங்கியதோடு, 2½ லட்சம் தபால்கள் தேங்கின.
நாகர்கோவில்,
கிராமிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவில் அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா குழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் கடந்த 22–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் பல்வேறு போராட்டங்களில் கிராமிய அஞ்சல்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கிராமிய அஞ்சல்துறை ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் 4–வது கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால் அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் 15–வது நாளாக நேற்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உள்ள ஜீவா சிலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரையிலும் மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க மாநில செயலாளர் இஸ்மாயில் தலைமை தாங்கினார்.
சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தில் ஆண்களும், பெண்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டனர். தபால்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ராஜநாயகம், அஞ்சல் ஊழியர் சங்க முன்னாள் கோட்ட தலைவர் முகமது அப்துல் ரவூப், பல்வேறு அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள் சுபாஷ், ஐசக், பிரசாத், கிறிஸ்டி, விசாலாட்சி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 15 நாட்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தால் குமரி மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள 186 துணை தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் பணம் எடுக்கவோ, போடவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கிராமப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
கடந்த மாத 22–ந் தேதி முதல் இந்த போராட்டம் தொடர்வதால் அஞ்சலக இன்சூரன்ஸ் திட்டங்கள், மாதாந்திர சேமிப்பு கணக்குகள் (ஆர்.டி.) போன்றவற்றில் மாத இறுதியில் பணம் செலுத்துபவர்கள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அபராத வட்டியுடன் பணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் மாதாந்திர சேமிப்பு கணக்கில் தொடர்ந்து 5 மாதம் பணம் செலுத்தாதவர்கள் 6–வது மாதத்திலாவது பணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அந்த கணக்குகளே முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் கடந்த மாதத்துடன் 6 மாத கெடு முடியக்கூடிய கணக்குதாரர்கள் கடந்த மாத இறுதியில் பணம் செலுத்த முடியாமல் போனதால் பலரது கணக்குகள் முடங்க வாய்ப்புள்ளதாக போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் துணை தபால் நிலையங்கள் மூலம் சம்பளம் பெறும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் தபால் நிலையங்கள் மூலம் உதவித்தொகை பெறும் பயனாளிகளும் பணம் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். கிராமப்புறங்களில் தபால் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான காலிப்பணியிடங்களில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள்தான் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நகர்ப்புறங்களிலும் தபால் பட்டுவாடா செய்யும் பணி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில் கடந்த 15 நாட்களில் குமரி மாவட்டத்தில் ரூ.75 கோடி பணப்பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளது என்றும், 2½ லட்சம் தபால்கள் தேங்கி கிடப்பதாகவும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related Tags :
Next Story