சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் பெரும் தீவிபத்து ராக்கெட் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள பரிசோதனை மையத்தில் மின்கசிவு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ராக்கெட் உதிரி பாகங்கள் எரிந்து நாசமாகின.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ராக்கெட், ஏவுகணை பரிசோதனை மையம், தனி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் ‘திடீர்’ என்று தீ பிடித்துக்கொண்டது.
அங்கிருந்து கரும்புகை வெளிவந்தது. புகை வருவதை கண்ட ஐ.ஐ.டி. ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிண்டி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்து, பரிசோதனை மையம் திறப்பதற்கு முன்பே ஏற்பட்டதால், அங்கு மாணவர்கள், பேராசிரியர்கள் யாரும் இல்லை. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் பரிசோதனை மையத்தில் இருந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் புரொபல்லன்ட் மற்றும் அதிநவீன சாதனங்கள் எரிந்து நாசமாகின. அங்கிருந்த மேஜைகள் மற்றும் நாற்காலிகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
மின்கசிவு காரணமாக, இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீவிபத்தை நேரில் பார்த்த கட்டுமான தொழிலாளர்கள் கூறுகையில், “முதலில் காதைப் பிளக்கும் வகையில் வெடிச்சத்தம் கேட்டது. பிறகு கரும்புகை வெளிவந்தது. கட்டிடம் முழுவதையும் தீ சூழ்ந்து கொண்ட பின்னர், மேலும் 3 தடவை வெடிச்சத்தங்கள் கேட்டன” என்றனர்.

Related Tags :
Next Story