அயனாவரத்தில் ரவுடியை வெட்டிய வாலிபர் கைது
அயனாவரத்தில் ரவுடியை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 8 ஆண்டுகளுக்குமுன் தந்தை கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக கொல்ல முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அம்பத்தூர்,
சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் (வயது 21). இவர் மீது அயனாவரம், ஐ.சி.எப். போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் அயனாவரத்தை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் (36) என்பவரை கொலை செய்யும் நோக்கத்தில், அயனாவரத்தில் உள்ள மார்க்கெட்டில் சஞ்சீவ்குமார் அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதில் கார்த்திக்கிற்கு லேசான காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்களும், இரவு ரோந்து பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியும் சஞ்சீவ்குமாரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த கத்தியை பறித்தனர். பின்னர் அவரை ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவ்குமாரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் தந்தையை கொன்றதால் பழிக்கு பழி வாங்க முயன்றதாக கூறியுள்ளார். கைதான சஞ்சீவ்குமார் தந்தை சம்பத் என்ற வன்னியசம்பத் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். முன்விரோதம் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு சம்பத்தை, கார்த்திக் கொலை செய்தார். கொலை செய்யப்பட்ட சமயத்தில் சஞ்சீவ்குமாரும், அவரது அண்ணன் சுப்பிரமணியராஜீவ் என்பவரும் சிறுவர்களாக இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் தந்தையை கொலை செய்த கார்த்திக்கை பழிக்கு பழியாக கொலை செய்ய வேண்டும் என அவர்கள் சபதம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்தே கார்த்திக்கை வெட்டியதாக சஞ்சீவ்குமார் போலீசாரிடம் கூறியுள்ளார்.
சஞ்சீவ்குமாரை சாமர்த்தியமாக மடக்கிப்பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் வரவழைத்து பாராட்டினார்.

Related Tags :
Next Story