திருச்சியில் ரூ.1 கோடி மதிப்பில் நவீன வன மரவிதை மையம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட கலெக்டர்கள், கல்வி நிறுவனங்களுக்கு பசுமை விருது வழங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் ரூ.1 கோடி மதிப்பில் நவீன வன மரவிதை மையத்தையும் திறந்து வைத்தார்.
திருச்சி,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 11.8.2016 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டின் மத்திய பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மரபியல் தரம் வாய்ந்த மற்றும் உயர்தர மர விதைகள் வழங்கும் அவசியத்தினை கருத்தில் கொண்டு, திருச்சியில் நவீன ‘வன மரவிதை மையம்’ ஏற்படுத்தப்படும்” என்று அறிவித்தார்.
அதன்படி, திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையத்தில் 1 கோடியே 5 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன வன மரவிதை மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த மையமானது, விதை சேகரம், ஆய்வு, தரப்படுத்துதல், குளிர்ந்த அறைகளில் விதைகளை சேமித்தல் மற்றும் வழங்குதலுக்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேட்டைத்தடுப்பு முகாம் கட்டிடம், ஒருங்கிணைந்த வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் குடியிருப்பு, வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் குடியிருப்பு ஆகியவற்றையும் முதல்- அமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் பணியாற்றும் களப்பணியாளர்கள் மற்றும் வண்டலூர் - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) பணியாற்றும் களப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 8 ஜீப்புகள், வன விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ், ஊழியர்களை ஏற்றி செல்லும் பஸ், மிருகங்களை ஏற்றி செல்லும் வாகனம் தலா ஒன்று, என மொத்தம் 11 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 5 ஓட்டுநர்களுக்கு வாகனத்தின் சாவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மாவட்டத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை, திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் விழுப்புரம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆகியோருக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறந்து விளங்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐ.எல்., எப்.எஸ். தமிழ்நாடு பவர் கம்பெனி லிமிடெட், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த யுனைடெட் புரூவரிஸ் லிமிடெட், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேஷசாயி பேப்பர் மற்றும் போர்ட்ஸ் லிமிடெட் ஆகிய தொழில் நிறுவனங்களுக்கும், வேலூர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகமான கல்வி நிறுவனங் களுக்கும் 2017-ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் வழங்கினார்.
மாவட்ட காஜிக்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஆற்றிவரும் சமூகப்பணிகளை கருத்தில்கொண்டு 1.3.2016 முதல் மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தினை தொடங்கிவைக்கும் அடையாளமாக 7 மாவட்ட காஜிக்களுக்கு நிலுவைத்தொகையுடன் சேர்த்து மொத்தம் 29 லட்சத்து 62 ஆயிரத்து 143 ரூபாய்க்கான காசோலைகளையும் முதல்- அமைச்சர் வழங்கினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story