பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஓட்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டம் சேலத்தில் நடந்தது.
சேலம்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட கிளை சார்பில், நேற்று சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவராஜ், பிரகாஷ், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செந்தில் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்ந்து உள்ளது. எனவே இந்த விலை உயர்வை கண்டிப்பது, உயர்த்தப்பட்ட பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பெட்ரோல், டீசலை கொண்டு வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அவர் பேசினார்.
நூதன ஆர்ப்பாட்டம்
விலை உயர்வால் பெட்ரோல் வாங்கி மோட்டார்சைக்கிள் ஓட்ட முடியவில்லை என்பதை விளக்கும் வகையில் சைக்கிள் ஓட்டி நூதன முறையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், துணை செயலாளர் கணேசன், பொருளாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரியசாமி நன்றி கூறினார். இதில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story