மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டய படிப்பு தொடக்கம்: விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாள்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டய படிப்பு தொடக்கம்: விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 7 Jun 2018 4:30 AM IST (Updated: 7 Jun 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டய படிப்பு (டி.பார்ம்) தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டய படிப்பு (டி.பார்ம்) தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மருந்தாக்க வேதியியல் துறையில் இந்த கல்வி ஆண்டு 2018-2019 முதல் இரண்டு வருட மருந்தியல் பட்டய படிப்பு (டி.பார்ம்) புதுடெல்லி இந்திய பார்மசி கவுன்சிலின் அனுமதி பெற்று தொடங்கப்பட்டு உள்ளது. இதில் சேருவதற்கு பிளஸ்-2 வகுப்பில் (இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதவியல்) தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை பெறுவதற்கும், சமர்ப்பிப்பதற்குமான கடைசி நாள் வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த படிப்பு முடித்தவர்கள் சென்னை தமிழ்நாடு மாநில பார்மஸி கவுன்சிலில் தனது சான்றிதழை பதிவு செய்து அரசு, தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் மருந்தாளுனராக பணிபுரியவும், மருந்துப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் பல பணிகளுக்கும், குறிப்பாக மருந்தின் தரம் சோதிக்கும் ஆய்வாளராகவும் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த படிப்பு படித்தால்தான் மத்திய, மாநில அரசின் அனுமதியுடன் தனியாக மருந்து கடை உரிமம் பெற்று நடத்தவும் முடியும். மேலும் டி.பார்ம் படித்தவர்கள், பி.பார்ம் போன்ற மேற்படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரவும் வாய்ப்பு உள்ளது.

மற்ற விவரவங்களை பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது 99651 78458, 94439 91710 ஆகிய தொலைபேசி எண்களின் மூலமோ அல்லது www.msun-iv.ac.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story