ஓடும் ரெயிலில் வடமாநில பெண்ணிடம் சில்மிஷம் கல்லூரி மாணவர் கைது


ஓடும் ரெயிலில் வடமாநில பெண்ணிடம் சில்மிஷம் கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2018 3:45 AM IST (Updated: 7 Jun 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே ஓடும் ரெயிலில் வடமாநில பெண்ணிடம் சில்மிஷம் செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம்,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு வந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் அருகே உள்ள கொடைரோடு செல்வதற்காக நேற்று முன்தினம் மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்தார்.

இந்த ரெயில் நேற்று அதிகாலை சேலம் அருகே உள்ள ஓமலூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே ரெயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த வடமாநில பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

கல்லூரி மாணவர் கைது

இதனிடையே அந்த ரெயில் சேலம் ரெயில் நிலையம் வந்தடைந்ததும் இதுதொடர்பாக அந்த பெண் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுரை வடக்கு மாசி வீதியை பிரகாஷ்ராஜ்(வயது 20) என்பதும், கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வடமாநில பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். 

Next Story