தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்தின் காலா படம் திரையிடப்பட்டது துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு தியேட்டரில் ரசிகர்கள் அஞ்சலி
தூத்துக்குடி தியேட்டரில் நேற்று காலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் திரையிடப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தியேட்டரில் நேற்று காலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் திரையிடப்பட்டது. அப்போது துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு ரசிகர்கள் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.
காலா படம்தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு பல அரசியல் தலைவர்கள், அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் நடித்த காலா படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இதனால் அந்த படத்திற்கு பல எதிர்ப்பு இருந்தது. இருந்த போதும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் காலாவை கொண்டாடினார்கள். தியேட்டர்களில் காலையிலேயே குவிந்தனர்.
மவுன அஞ்சலிதூத்துக்குடியில் ஒரு தியேட்டரில் நேற்று காலை 9.47 மணிக்கு ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டது. இதையொட்டி தியேட்டர் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் வரவில்லை. வழக்கமாக அவரது படத்துக்கு இருக்கும் வரவேற்பு, தூத்துக்குடியில் சற்று குறைவாகவே இருந்தது. ரசிகர்கள் காட்சி திரையிடப்படும் முன்பு, தியேட்டரில் இருந்தவர்கள், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த 13 பேருக்கும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் காலை 9.49 மணிக்கு படம் திரையிடப்பட்டது.