நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று தொடங்குகிறது


நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 8 Jun 2018 2:00 AM IST (Updated: 8 Jun 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று தொடங்குகிறது.

நெல்லை,

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று தொடங்குகிறது.

சான்றிதழ் சரிபார்க்கும் பணி

என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்வதற்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடக்கிறது. இந்த கவுன்சிலிங்கிற்கு செல்கின்றவர்களுக்கு அவர்களுடைய உண்மை சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்க தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 42 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்குகிறது. இதையொட்டி இந்த மையங்களில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு அதற்கு ஒரு அதிகாரியை நியமனம் செய்து உள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரும், நெல்லை மையத்தின் அண்ணா பல்கலைக்கழக பிரதிநிதியுமான ஜார்ஜ் வாஷிங்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணி குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்களான துணை முதல்வர் சித்தார்த்தன், பேராசிரியர் லதா மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். இன்று தொடங்கும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி வருகிற 14–ந் தேதி வரை நடக்கிறது.


Next Story