மாவட்ட செய்திகள்

மண்டியாவில் காலா படம் திரையிடப்படவில்லை: ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜின் உருவப்படங்கள் எரிப்பு + "||" + Gala movie is not screened in Mandya: Rajinikanth, Prakash Raj's flick photos

மண்டியாவில் காலா படம் திரையிடப்படவில்லை: ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜின் உருவப்படங்கள் எரிப்பு

மண்டியாவில் காலா படம் திரையிடப்படவில்லை: ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜின் உருவப்படங்கள் எரிப்பு
மண்டியாவில் நேற்று காலா படம் திரையிடப்படவில்லை, ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜின் உருவப்படங்களை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மண்டியா,

மண்டியாவில் நேற்று காலா படம் திரையிடப்படவில்லை, ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜின் உருவப்படங்களை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

படம் வெளியிட தடை

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் அவர் நடித்த காலா படத்தை கர்நாடகத்தில் திரையிட கூடாது என்று கன்னட அமைப்புகள், கர்நாடக வர்த்தக சபையிடம் வலியுறுத்தின. இதனை தொடர்ந்து காலா படத்தை வெளியிட கர்நாடக வர்த்தக சபை தடை விதித்தது.

ஆனாலும் திட்டமிட்டப்படி நேற்று கர்நாடகத்தில் காலா திரைப்படம் வெளியானது. முன்னதாக காலா படம் வெளியிடும் திரையரங்குகள் முன்பு கன்னட அமைப்பினர் கூடி, காலா படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

உருவப்படங்கள் எரிப்பு

இந்த நிலையில் மண்டியாவில் உள்ள திரையரங்குகளில், கன்னட அமைப்பினர் கேட்டு கொண்டதன் பேரில் காலா படம் திரையிடப்படவில்லை. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசிய ரஜினிகாந்த், கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட வேண்டும் என்று ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக பேசிய பிரகாஷ்ராஜ் ஆகியோரை கண்டித்து பெங்களூரு–மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜிக்கு எதிராக கன்னட அமைப்பினர் கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த சந்தர்ப்பத்தில் சிலர் ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜின் உருவப்படங்களுக்கு தீ வைத்து எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிகாட்டினர். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மண்டியா டவுனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. சம்பளம் வழங்கக்கோரி கதர்வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
சம்பளம் வழங்கக்கோரி கதர்வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. காசிமேட்டில் ‘கியாஸ் பங்க்’ திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம் போலீசாருடன் வாக்குவாதம்
காசிமேட்டில் ‘கியாஸ் பங்க்’ திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
3. 4–வதும் பெண் குழந்தை என கருதி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி சாவு; நர்ஸ் கைது
உசிலம்பட்டி அருகே 4–வதும் பெண் குழந்தை என கருதி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். அவருக்கு கருக்கலைப்பு செய்த நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
4. விடுதியில் அடிப்படை வசதிகள் செய்ய கோரி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
விடுதியில் அடிப்படை வசதிகள் செய்ய கோரி வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. எச்.ராஜாவை கண்டித்து ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறையினர் அலுவலக புறக்கணிப்பு போராட்டம்
ஈரோட்டில் எச்.ராஜாவை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறையினர் அலுவலக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.