ஆயுட்காலத்தை அதிகரிக்கும் பழக்கம்


ஆயுட்காலத்தை அதிகரிக்கும் பழக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2018 4:42 PM IST (Updated: 9 Jun 2018 4:42 PM IST)
t-max-icont-min-icon

அலுவலக நெருக்கடி இல்லாத வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவது சிலரது வாடிக்கை. அத்தகையவர்கள், தெரிந்தோ தெரியாமலே ஒரு நல்ல வழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர்.

ஆம், வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவது மரணத்தைத் தள்ளிப்போடும் என்பது ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.

சுமார் 38 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.

தினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர் களின் ஆயுட்காலம் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பொதுவாகவே, உழைப்பைப் போல உறக்கத்துக்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் பிரச்சினைதான்! 

Next Story