மாவட்ட செய்திகள்

குளச்சலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை + "||" + Heavy Rain With Hurricane Winds: Weavers and Fishermen did not go fishing

குளச்சலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

குளச்சலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
குளச்சலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், வள்ளம், கட்டுமர மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.
குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுமரம், வள்ளங்களும் மீன்பிடித்து வருகின்றன. விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று 10–க்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள். கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் அதிகாலையில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துவிட்டு மதியம் கரைக்கு வருவார்கள்.


 தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. இதனால், அவர்களது விசைப்படகுகள் கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கட்டுமர மீனவர்கள் கரைப்பகுதியில் மீன்பிடித்து வந்தனர்.

குளச்சலில் நேற்று காலையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரையோரம் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.

சில மீனவர்கள் அதிகாலையிலேயே கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களும் கடலில் சூறாவளி காற்று வீசியதால் அவசரமாக கரை திரும்பினார்கள். இந்த மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்கியிருந்தன.

இதனால், சந்தையில் மீன்வரத்து குறைந்து மீன்களின் விலை உயர்ந்தது.