மாவட்ட செய்திகள்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + The demonstration of Jacotto

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊட்டி,

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில், பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2003–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை மத்திய அரசு போல் தமிழகத்தில் 1.1.2016 முதல் ரொக்கமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், தொடக்கக்கல்வியில் 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூடுவது அல்லது இணைப்பது என்ற திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஊட்டியில் கொட்டும் மழையிலும் ஜாக்டோ அமைப்பினர் குடைகளை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த செய்யும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சபரி மலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரள முதல்வரை கண்டித்தும் இந்து முன்னணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. வாகன நிறுத்தத்துக்கு அதிக கட்டணம் வசூல்: ஊட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வாகன நிறுத்தத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து ஊட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. திருப்பூர், பல்லடத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், பல்லடத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
5. 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.