மாவட்ட செய்திகள்

சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வை 735 பேர் எழுதினர் ஐகோர்ட்டு நீதிபதி, கலெக்டர் ஆய்வு + "||" + 735 people were selected for the civil jurisdiction of the post of judge judge and collector

சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வை 735 பேர் எழுதினர் ஐகோர்ட்டு நீதிபதி, கலெக்டர் ஆய்வு

சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வை 735 பேர் எழுதினர் ஐகோர்ட்டு நீதிபதி, கலெக்டர் ஆய்வு
சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வை திருச்சியில் 735 பேர் எழுதினர். தேர்வு மையங்களை ஐகோர்ட்டு நீதிபதி, கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திருச்சி,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதி பதவிக்கான போட்டித்தேர்வு திருச்சியில் தேசியக்கல்லூரி, பாரதிநகரில் உள்ள காவேரி மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகிய 2 மையங் களில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடந்தது. தேர்வுக்கு 771 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 735 பேர் தேர்வு எழுதினர். 36 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு மையங்களை கண்காணிக்க 3 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.


போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள இயங்குக்குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் துணை கலெக்டர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளரும் பணியில் இருந்தனர். தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

தேர்வு மையங்களை ஐகோர்ட்டு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி வி.கார்த்திகேயன், மாவட்ட நீதிபதி (குடும்ப நல கோர்ட்டு) ஆர்.குருமூர்த்தி மற்றும் கருவூலத்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் உள்ளிட்டோர் இருந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி மாவட்ட ‘ஆவின்’ தலைவராக கார்த்திகேயன் பதவி ஏற்பு அமைச்சர்கள், எம்.பி.க்கள் வாழ்த்து
திருச்சி மாவட்ட ‘ஆவின்’ தலைவராக கார்த்திகேயன் பதவி ஏற்றார். அவரை அமைச்சர்கள், எம்.பி.க்கள் வாழ்த்தினர்.
2. நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலர் கைது
நீதிபதியின் மனைவி, மகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. ஈராக்கில் புதிய அதிபர், பிரதமர் தேர்வு
ஈராக் புதிய அதிபராக பர்ஹாம் சாலேவும், பிரதமராக அதேல் அப்துல் மாஹ்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.
4. நீதிபதி என பொய் கூறி வீடு, இடம் வாங்கி தருகிறேன் என 40 பேரிடம் மோசடியில் ஈடுபட்டவர் கைது
தெலுங்கானாவை சேர்ந்த நபர் நீதிபதி என பொய் கூறி குறைந்த விலையில் வீடு, வர்த்தக இடங்களை வாங்கி தருகிறேன் என்று 40 பேரிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.
5. தமிழ்வழியில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
தமிழ்வழியில் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி ஆரல்வாய்மொழியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.