மாவட்ட செய்திகள்

கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Building worker beaten up to 4 people Police brigade

கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ஜேடர்பாளையம் அருகே கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள வ.காளிப்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் அஜித்குமார்(வயது 20). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி குணவதி. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.


இந்த நிலையில் அஜித்குமார் நண்பர்கள் 4 பேருடன் நேற்று தனது வீட்டில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டு இருந்தார். நண்பர்களும் மது அருந்தினார்கள். அப்போது குடிபோதையில் நண்பர்களுக்கும், அஜித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரத்தில் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்த நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அஜித்குமார் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது மனைவி, உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகள் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

ஆசிரியரின் தேர்வுகள்...