கடத்தூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவருக்கு போலீசார் வலைவீச்சு


கடத்தூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Jun 2018 3:45 AM IST (Updated: 11 Jun 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

கடத்தூரில் பேக்கரியில் நடந்த சண்டையை தடுக்க சென்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு, தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடத்தூர்,

கடத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் நாகராஜ். இவர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் இருந்தபோது கடத்தூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள பேக்கரி கடையில் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், தகராறில் ஈடுபட்டவரை தடுக்க முயன்றார்.

இதனால் அவருக்கும், நாகராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது அவர் தாக்கியதில் நாகராஜ் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர் தப்பி ஓடிவிட்டார்.

வலைவீச்சு

காயம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தியதில், தகராறில் ஈடுபட்டவர் கடத்தூரை சேர்ந்த மாரிமுத்து மகன் அன்பு (வயது 34) என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story