மாவட்ட செய்திகள்

வாலிபர் கழுத்தை அறுத்து கொலை யார் அவர்? போலீஸ் விசாரணை + "||" + Kill the young man neck and kill him Who he is investigating the police

வாலிபர் கழுத்தை அறுத்து கொலை யார் அவர்? போலீஸ் விசாரணை

வாலிபர் கழுத்தை அறுத்து கொலை யார் அவர்? போலீஸ் விசாரணை
திருவொற்றியூரில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு, மழைநீர் கால்வாயில் உடல் வீசப்பட்டு கிடந்தார். அவர் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் விம்கோ நகரில் தனியார் பள்ளிக்கூடத்தின் பின்புறம் உள்ள மழைநீர் கால்வாயில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.


மர்மநபர்கள் அவரது கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கொலை செய்து விட்டு, உடலை மழைநீர் கால்வாயில் வீசி உள்ளனர்.நேற்று காலை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலையான அந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் கறுப்பு நிறத்தில் வெள்ளை கோடு போட்ட டி-சர்ட்டும், கருநீல நிறத்திலான அரைக்கால் சட்டையும் அணிந்து இருந்தார்.

அவருடைய உடல் கிடந்த இடம் அருகே ஆடுகளை வெட்ட பயன்படுத்தும் கத்தி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையுண்ட வாலிபர் பார்ப்பதற்கு வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் தோற்றம் அளிக்கிறார். திருவொற்றியூர், மணலி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் வடமாநில வாலிபர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

எனவே வடமாநிலத்தை சேர்ந்த நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், அந்த வாலிபரை யாரேனும் இங்கு அழைத்து வந்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, உடலை கால்வாயில் வீசினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்த வடமாநில வாலிபர்கள் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. காதல் மனைவி புகார் கொடுத்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
அருமனை அருகே காதல் மனைவி புகார் கொடுத்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. மலேசியாவில் வேலை பார்த்த வாலிபர் மர்ம சாவு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கலெக்டரிடம் கோரிக்கை
மலேசியாவில் ஓட்டலில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, புதுக்கோட்டை கலெக்டருக்கு, வாலிபரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. கோவிலில் விளக்கு ஏற்றிய தகராறு: தொழிலாளி அடித்து கொலை வாலிபர் கைது
கோவிலில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. திருவரங்குளத்தில் கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபர் கைது
திருவரங்குளத்தில் கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. திருவாரூரில்: வாலிபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - 2 பேர் கைது
திருவாரூரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.