மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstrators demanded the road workers to blow up the black hole

கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலி யுறுத்தி கருப்பு கொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சந்திரசேனன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட துணைத்தலைவர் மலைஇளங்கோவன், மாவட்ட இணை செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கிணையான ஊதியம் வழங்க வேண்டும்.

மாத ஊதியம், கருவூலம் மூலம் நிரந்த ஊதிய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும்.நெடுஞ்சாலை பராமரிப்பு பணியினை தனியாரிடம் வழங்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பொள்ளாச்சி, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், பழனி கோட்ட சாலைகளை தனியார் நிறுவனத்திடம் பராமரிப்பிற்காக விடப்பட்டதை திரும்ப பெற வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள் கருப்பு கொடியேந்தி, சங்கு ஊதி தமிழக அரசை எழுப்பும் விதமாக கோஷங்கள் எழுப்பி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் திரவியராஜ் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கலெக்டர் அலுவலகம் முன்பு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி தொழிலாளர்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. தஞ்சையில் நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. திருத்துறைப்பூண்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 100-க்கும் மேற்பட்டோர் கைது
திருத்துறைப்பூண்டியில் தொழிற்சங்கங்கள் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
5. தஞ்சையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.