மாவட்ட செய்திகள்

கெய்ல் எரிவாயு குழாயை விவசாய நிலங்களில் பதித்தால் போராட்டம் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரிக்கை + "||" + The Gayle gas pipeline in agricultural lands is a struggle

கெய்ல் எரிவாயு குழாயை விவசாய நிலங்களில் பதித்தால் போராட்டம் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரிக்கை

கெய்ல் எரிவாயு குழாயை விவசாய நிலங்களில் பதித்தால் போராட்டம் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரிக்கை
கெய்ல் எரிவாயு குழாயை விவசாய நிலங்களில் பதித்தால் போராட்டம் நடக்கும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

விளைநிலங்கள் வழியாக கெய்ல் எரிவாயு குழாயை பதிக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதியை வழங்கி விடக்கூடாது. தமிழக அரசிடம் அனுமதி கிடைத்ததும் 3 ஆண்டுகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்படுமென்று கெய்ல் தென்மண்டல செயல் இயக்குனர் அறிவித்திருப்பது கொங்கு மண்டல விவசாயிகளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கெய்ல் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாயின் வழியாக எரிவாயுவை கொண்டு செல்ல திட்டமிட்டு தமிழகத்தில் விவசாய விளை நிலங்களில் குழாய்கள் பதிக்க பணிகள் தொடங்கியது. அப்போது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 கொங்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே விவசாய குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு போராடி கொண்டிருக்கும் சூழ்நிலையில் எரிவாயு குழாயை விளைநிலங்களின் வழியே கொண்டு சென்றால் மேற்கண்ட 7 மாவட்டங்களிலும் விவசாயம் அழிந்து போகும் நிலை உருவாகும்.

இந்த திட்டம் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து மாற்று வழியான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கொ.ம.தே.க சார்பில் விவசாயிகளின் நலனுக்காக கொங்கு மண்டலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தை மறுசீராய்வு செய்யாவிட்டால் தமிழகத்திலும் போராட்டம் வெடிக்கும்; இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தை மறு சீராய்வு செய்யாவிட்டால் தமிழகத்திலும் போராட்டம் வெடிக்கும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறினார்.
2. போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்; கல்வீச்சில் 30 பஸ்கள் சேதம்
போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் 30 அரசு பஸ்கள் சேதம் அடைந்தன. மர்ம ஆசாமிகள் கர்ப்பிணியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கவர்னரின் காரை வழிமறித்து மாணவர்கள் திடீர் போராட்டம்; சட்டக்கல்லூரியில் பரபரப்பு
புதுவை சட்டக்கல்லூரியில் கவர்னரின் காரை வழிமறித்து மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
4. நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க 16 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அமைச்சரிடம் மனு
நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி 16 கிராம விவசாயிகள் அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
5. அம்பத்தூர் நீதிமன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் போராட்டம்
போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.