காங்கிரஸ்- த.மு.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு


காங்கிரஸ்- த.மு.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
x
தினத்தந்தி 12 Jun 2018 5:10 AM IST (Updated: 12 Jun 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நெல்லை

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கு பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறுபான்மை துறை தலைவர் முகமது அனஸ்ராஜா, துணை தலைவர் ரசூல் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், எச்.வசந்தகுமார், முன்னாள் எம்.பி.ராமசுப்பு, மாவட்ட தலைவர்கள் (கிழக்கு) சிவக்குமார், பழனிநாடார் (மேற்கு), நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், நெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், சாரதா கல்லூரி நிர்வாகி சுவாமி பக்தானந்தா, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தாளாளர் பத்ஹுர் ரப்பானி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மேலப்பாளையம் பகுதி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மேலப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. பகுதி தலைவர் மைதீன் பாதுஷா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் காஜா, பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அசன் மைதீன் வரவேற்று பேசினார்.

மாநில துணை தலைவர் ஹமீது, மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் அலித்பிலால். பொருளாளர் சுல்தான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமதுஅலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் திமு.க. பகுதி செயலாளர் அப்துல் கையூம், த.மு.மு.க. நிர்வாகிகள் இனாயத்துல்லா, மசூத், ஜமால், அஜித், ஜாப்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story