தடையை மீறி பட்டா நிலத்தில் இறந்தவரின் உடலை எடுத்து சென்றவர்களிடம் விசாரணை


தடையை மீறி பட்டா நிலத்தில் இறந்தவரின் உடலை எடுத்து சென்றவர்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 13 Jun 2018 3:45 AM IST (Updated: 13 Jun 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

பட்டா நிலத்தில் தடையை மீறி அந்த பகுதியை சேர்ந்த சிலர், இறந்தவரின் உடலை கொண்டு செல்வதாக புகார் எழுந்தது.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள வெள்ளோலை கிராமத்தை சேர்ந்தவர் சமயபுரத்தான் (வயது 25). இவருடைய பட்டா நிலத்தில் தடையை மீறி அந்த பகுதியை சேர்ந்த சிலர், இறந்தவரின் உடலை கொண்டு செல்வதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே சமயபுரத்தான் கொடுத்த புகாரின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அந்த பகுதியில் உள்ள பொதுவழியை பயன்படுத்த வேண்டும் என்றும், பட்டா நிலத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் இறந்தார். அவருடைய உடலை, உறவினர்கள் தடையை மீறி பட்டா நிலம் வழியாக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமயபுரத்தான் அளித்த புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story