மாநிலம் முழுவதும் இன்று முதல் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம்


மாநிலம் முழுவதும் இன்று முதல் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:43 PM GMT (Updated: 12 Jun 2018 11:43 PM GMT)

மாநிலம் முழுவதும் சம்பள உயர்வு கோரி பயிற்சி டாக்டர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக மருத்துவ சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் சம்பள உயர்வு கோரி பயிற்சி டாக்டர்கள் இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற னர். பயிற்சி டாக்டர்களுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் சம்பளத்தை ரூ.11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என மாநில அரசு கடந்த 2015-ம் ஆண்டு உறுதி அளித்து இருந்தது.

இருப்பினும் பயிற்சி டாக்டர்களுக்கான சம்பளம் இன்னும் உயர்த்தப்பட வில்லை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 26-ந்தேதி அவர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 15 நாட்களில் பயிற்சி டாக்டர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று மருத்துவ கல்வித்துறை மந்திரி கிரிஷ் மகாஜன் தெரிவித்து இருந்தார். ஆனால் இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதையடுத்து இன்று முதல் பயிற்சி டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர். இதன் காரணமாக மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Next Story