வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்


வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jun 2018 4:00 AM IST (Updated: 13 Jun 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8–வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் கலந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குனரான பாண்டியராஜன் 1949–முதல் 2000–ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து தாக்கல் செய்த கட்டுரைக்கு டாக்டர் பட்டம் (பிஎச்.டி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார். விழாவில் பல்கலைக்கழக துணை தலைவர் ஆர்த்தி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story