மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் 96 ஜவ்வரிசி ஆலைகளில் ‘பிரஷர்’ மோட்டார் அகற்றம் + "||" + 'Pressure' motor is cleared in 96 jawarri factories throughout the district

மாவட்டம் முழுவதும் 96 ஜவ்வரிசி ஆலைகளில் ‘பிரஷர்’ மோட்டார் அகற்றம்

மாவட்டம் முழுவதும் 96 ஜவ்வரிசி ஆலைகளில் ‘பிரஷர்’ மோட்டார் அகற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் 96 ஜவ்வரிசி ஆலைகளில், அவற்றின் உரிமையாளர்களே முன்வந்து ‘பிரஷர்’ மோட்டாரை அகற்றி கொண்டதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, வெண்ணந்தூர் பகுதிகளில் 135 ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் மரவள்ளி கிழங்கை பயன்படுத்தி ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.


இந்த நிலையில் ஒருசில ஆலைகளில் மக்காச்சோள மாவை மரவள்ளி கிழங்குடன் கலப்படம் செய்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுவதாகவும், இதனால் மரவள்ளி கிழங்குக்கு விலை கிடைப்பது இல்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஜவ்வரிசி ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது ஆலைகளில் ஜவ்வரிசி தயாரிப்பில் மக்காச்சோள மாவு கலப்படம் செய்வதும், ஜவ்வரிசி நிறம் வருவதற்காக ‘பிரஷர்’ மோட்டார் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

அந்த ஆலைகளின் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீசு அளித்து விளக்கம் கேட்டு வந்தனர். சில ஆலைகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுமதிக்கப்படாத மாவுகளை மரவள்ளி கிழங்கு பாலுடன் சேர்த்து ஜவ்வரிசி தயார் செய்யக் கூடாது எனவும், ரசாயன பொருட்களை ‘பிரஷர்’ தொட்டி மூலம் சுத்தம் செய்து, ஜவ்வரிசியை வெள்ளையாக்கி, மக்களை ஏமாற்ற கூடாது எனவும் ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர். அத்துடன் ஆலைகளில் உள்ள ‘பிரஷர்’ மோட்டார் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள குழாய்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து ஆலை உரிமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து ஜவ்வரிசி ஆலைகளில் உள்ள ‘பிரஷர்’ மோட்டாரை அகற்றி, அதை புகைப்படம் எடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை மாவட்டம் முழுவதும் 96 ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் ‘பிரஷர்’ மோட்டாரை அகற்றி, எவ்வித கலப்படமும் இல்லாத ஜவ்வரிசி தயாரிப்பதை உறுதி செய்து இருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றம் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நச்சலூரில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. அப்போது கடையின் உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
3. தனியார் பஸ்களில் காற்றொலிப்பான்கள் அகற்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
கரூரில் தனியார் பஸ்களில் இருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்களை அகற்றி கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டார்.
4. மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் கடைகளும் அடைக்கப்பட்டன
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு மோட்டார் தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடைகளும் அடைக்கப்பட்டது.
5. வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு; உரிமையாளர்கள் சாலைமறியல்
தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.