தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:45 PM GMT (Updated: 13 Jun 2018 9:31 PM GMT)

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். ஆரம்ப பள்ளிஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரத்தினம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைத்தலைவர் யோகராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களிடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story