மாவட்ட செய்திகள்

கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் + "||" + The mass protest demonstrated by the blockade

கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பஸ்தலபள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நேற்று அங்கு சென்று மலையின் ஒரு பகுதியை தனியார் குவாரிக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும், பாறைகளை தகர்க்க வெடி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரியை முற்றுகையிட்டு் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பஸ்தலபள்ளி கிராமத்தில் திம்மராய சாமி என்ற மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர்த்திருவிழா மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில்் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு சூளகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும், பெங்களூரு, மாலூர், சந்தாபுரம் போன்ற கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து திம்மராய சாமியை வழிபட்டு செல்கிறார்கள்.


இந்த நிலையில், கோவில் அருகே மலையின் ஒரு பகுதியை, ஒரு தனியார் கல்குவாரிக்கு அரசு சார்பில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பணி தொடங்கும் வகையில் பாறைகளுக்கு வெடி வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த பஸ்தலபள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நேற்று அங்கு சென்று மலையின் ஒரு பகுதியை தனியார் குவாரிக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும், பாறைகளை தகர்க்க வெடி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரியை முற்றுகையிட்டு் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படாவிட்டால், சூளகிரி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களை திரட்டி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. மணமேல்குடி பகுதியில் சாலையில் கிடந்த மரங்களை பொதுமக்கள் அகற்றினர்
மணமேல்குடி பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை பொதுமக்கள் அகற்றினர்.
2. ‘கஜா’ புயலால் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன: நீடாமங்கலத்தில் 36 மணிநேரம் மின்தடை பொதுமக்கள் அவதி
‘கஜா’ புயலில் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்ததால் நீடாமங்கலத்தில் 36 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
3. ‘கஜா’ புயலின் பாதிப்பால் இருளில் மூழ்கி கிடக்கும் கிராமங்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்
கஜா புயலின் தாக்கத்தால் மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் மின்சார வசதி இன்றி கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதுகுறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4. கிராமத்துக்குள் புகுந்து 2 கன்றுக்குட்டிகள்- நாயை கொன்ற புலி பொதுமக்கள் பீதி
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து 2 கன்றுக்குட்டிகள் மற்றும் நாயை புலி அடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
5. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.