2 ஆயிரத்து 79 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்


2 ஆயிரத்து 79 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jun 2018 10:30 PM GMT (Updated: 13 Jun 2018 9:32 PM GMT)

குன்னம் தாலுகாவில் நடந்த சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் 2 ஆயிரத்து 79 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் குன்னம் தாலுகா பரவாய் கிழக்கு கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா நடந்தது. விழாவில் வருவாய்த் துறை மூலம் ஆயிரத்து 931 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 850 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், விபத்து நிவாரண உதவித்தொகை, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டது.

ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 96 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 24 லட்சத்து 66 ஆயிரத்து 500 மதிப்பில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு, முதல்-அமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் 2 ஆயிரத்து 79 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரத்து 811 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் சாந்தா வழங்கினார்.

அதிகாரிகள்

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் மனோகரன், தாசில்தார்கள் தமிழரசன், மனோன்மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கனகசபை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இந்திரா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story