மாவட்ட செய்திகள்

பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு விருதுநகரை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர் + "||" + The girl was handed over to the police by a lady belonging to Virudhunagar

பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு விருதுநகரை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்

பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு விருதுநகரை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்
முத்துப்பேட்டை அருகே பெண்ணிடம் நகை, பணத்தை திருடிய விருதுநகரை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி ஆனந்தவள்ளி (வயது 35). இவர் தனது மகளுடன் நாகப்பட்டினம் சென்றார். பின்னர் முத்துப்பேட்டைக்கு பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து இருந்த ஒரு பெண், ஆனந்தவள்ளி கையில் வைத்திருந்த பையை எடுத்து கொண்டு சங்கேந்தி அருகே பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது ஆனந்தவள்ளி தனது கையில் வைத்திருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது பஸ்சில் தனது அருகில் அமர்ந்து இருந்த பெண் தான் தனது பையை எடுத்து சென்றுள்ளார் என்றும், அதில் 25 பவுன் நகை மற்றும் பணம் இருந்ததாகவும் கூறினார். இதனையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பயணிகள் ஆனந்தவள்ளியிடம் பையில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்ற பெண்ணை தேடினர். இந்தநிலையில் அங்கு பயணிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்து எடையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


விருதுநகரை சேர்ந்த பெண் கைது

போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் விருதுநகர் பாண்டி நகரை சேர்ந்த முருகன் மனைவி வள்ளி (52) என்பதும், ஆனந்தவள்ளியிடம் பையில் இருந்த 25 பவுன்நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகை, பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்-நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நீடாமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. தூத்துக்குடியில் குடோன் ஷட்டரை உடைத்து ரூ.46 லட்சம் முந்திரிக்கொட்டை திருட்டு ; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தூத்துக்குடியில் குடோன் ஷட்டரை உடைத்து ரூ.46 லட்சம் மதிப்புள்ள முந்திரிக்கொட்டைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. தொப்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: கூலித்தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
தொப்பூர் அருகே பட்டப்பகலில் கூலித்தொழிலாளி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த நகை, பணத்தை திருடிச்சென்றனர்.
4. மளிகை கடையின் ஓட்டை பிரித்து பணம், பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நீடாமங்கலம் அருகே மளிகைகடையின் ஓட்டை பிரித்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர் களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. பணம் திருடியதாக தாய் கண்டிப்பு: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் கிணற்றுக்குள் உயிருக்கு போராட்டம்
ராஜாக்கமங்கலம் அருகே பணம் திருடியதாக தாய் கண்டித்ததால் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். காயங்களுடன் உயிருக்கு போராடிய அவர் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை