கோவில் திருவிழாவில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமாடிய 8 பேர் கைது


கோவில் திருவிழாவில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமாடிய 8 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2018 3:45 AM IST (Updated: 15 Jun 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவில் நடந்த ஆடல்,பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலியமங்கலம்,

தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை அடுத்த புலவர்நத்தம் கிராமம் கீழத்தெருவில் சியாமளாதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழாவில் இரவு ஒரு நடனக்குழுவினரின் ஆடல்,பாடல் நிகழ்ச்சி காவல்துறை அனுமதி பெறாமல் நடந்ததாகவும், நிகழ்ச்சியில் கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் இருந்த அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் புலவர்நத்தம் கீழ்பாதிக்கு நேரில் சென்று ஆடல்,பாடல் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனாலும் அதையும் மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.

8 பேர் கைது

இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து புலவர்நத்தம் கீழ்பாதியை சேர்ந்த நடேசன் (வயது 60), தர்மராஜ் (50), சங்கரன் (60), தங்கராஜ் (65), பெரியார் நகரை சேர்ந்த ஐயப்பன் (35), திருமங்கலக்கோட்டையை சேர்ந்த விஜயகாந்த் (32), ஆனைக்காரன்தெருவை சேர்ந்த பாலமுருகன் (33), தஞ்சை ஞானம் நகர் முதல் தெருவை சேர்ந்த சக்தி (26) ஆகிய 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story