மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாளை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்


மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: நாளை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்
x
தினத்தந்தி 14 Jun 2018 10:45 PM GMT (Updated: 14 Jun 2018 9:40 PM GMT)

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்.

சேதுபாவாசத்திரம்,

மீன் இனப்பெருக்க காலம் என கூறி அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுமீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதித்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு முதல் நடைமுறையை மாற்றி ஜூன் 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை 61 நாட்கள் தடைவிதித்தது. விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியும். விசைப்படகு மீனவர்கள் அனைவரும் நேற்று 14-ந்தேதி நள்ளிரவு 12 மணியுடன் தடைகாலம் நிறைவடைவதால் படகுகள் அனைத்தையும் மராமத்து செய்து ஐஸ்பெட்டி, வலை போன்ற மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றி கடலுக்கு செல்ல தயார் நிலையில் இருந்தனர்.

இந்தநிலையில் வழக்கமாக புதன்கிழமை அதிகாலை கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் தடைகாலம் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதால், மறுநாள் வெள்ளிக்கிழமை என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி கிடையாது. மேலும் அரசு தரப்பில் அனுமதி டோக்கனும் வழங்கமாட்டார்கள். எனவே வழக்கமாக கடலுக்கு செல்லக்கூடிய நாளை(சனிக்கிழமை) தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். 

Next Story