முதியவர்களை பராமரிக்க தவறினால் 3 மாதம் சிறை: கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை
முதியவர்களை பராமரிக்க தவறினால் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை விடுத்தார்.
மதுரை,
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின நிகழ்ச்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதியோர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்க மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து சட்டத்திருத்தம் செய்துள்ளது. முதியோர்களை எவரேனும் துன்புறுத்தினாலோ அல்லது அவர்களை ஆதரிக்காமல் கைவிடுபவர் கள் மீது கடுமையான தண்டனைகள் பாயும். மூத்த குடிமக்கள் தனது மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோர் மீதும் பிள்ளைகள் இல்லாத மூத்த குடிமக்கள் தனது சொத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர் அல்லது தனது காலத்திற்கு பின் தனது சொத்தை அடைய இருப்பவர்கள் மீதும் இந்த வன்கொடுமைச்சட்டத்தில் புகார் செய்யலாம்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளால் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவவசதி போன்றவைகள் தரப்படவில்லை என்றாலும் புகார் செய்யலாம். மூத்த குடிமக்கள் நேரடியாக சென்று மனுதாக்கல் செய்ய இயலவில்லை என்றால் வேறு ஒருவரை அல்லது தொண்டு நிறுவனத்தின் மூலமாக புகார் செய்யலாம். மூத்த குடிமக்கள் புகார்களை தெரிவிக்க நீதிமன்றத்திற்கோ அல்லது காவல் நிலையத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த சட்டத்தின்கீழ் வருவாய் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். மாவட்ட சமூகநல அலுவலர் இந்த மூத்த குடிமக்கள் பராமரிப்பு சமரச சட்ட அலுவலராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்பட்ட மனுவானது சமரச அலுவலருக்கு விசாரணைக்கு அனுப்பப்படும். உடனே சமரச அலுவலர் இரு தரப்பினர்களுக்கும் அழைப்பாணை அனுப்பி விசாரணை செய்து தனது அறிக்கையை 30 நாட்களுக்குள் தீர்ப்பாயத்திற்கு அனுப்புவார். சமரச அலுவலர் அனுப்பும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தீர்ப்பாயங்கள் உத்தரவு வழங்கும். இந்த தீர்ப்பில் குறிப்பிட்ட பராமரிப்புத் தொகையை 30 நாட்களுக்குள் குற்றம் சாட்டப்பட்டவர் வழங்க வேண்டும்.
தீர்ப்பாயத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையத்தின்படி பராமரிப்புத்தொகை வழங்கப்படவில்லை என்றால் 1 மாதத்திற்கு சிறை தண்டனை அல்லது பணம் செலுத்தும் வரை சிறை தண்டனை வழங்க இந்த சட்டத்தில் வழிவகை உள்ளது. முதியவர்களை பராமரிக்க தவறியவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக அளிக்கப்படும். எனவே முதியவர்களை ஒதுக்காமல் அவர்களை அன்புடன் அரவணைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

Related Tags :
Next Story