பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஜி.கே.வாசன் வழங்கினார்
மீன்பிடி தடைகாலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வழங்கினார்.
திருவொற்றியூர்,
வடசென்னை தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயபுரத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் ராயபுரம் பாலா தலைமை தாங்கினார். இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜி.கே.வாசன், நிருபர்களிடம் கூறியதாவது.
மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து, ரூ.25 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். விசைப்படகுகளுக்கு மானியமாக 1,200 லிட்டர் டீசல் தருவதை 5 ஆயிரம் லிட்டராகவும், சிறிய பைபர் படகுகளுக்கு வழங்கப்படும் 350 லிட்டர் டீசலை ஆயிரம் லிட்டராகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு, மீனவர்களுக்காக பாடுபட்ட ஜீவரத்தினம் பெயரை சூட்டவேண்டும். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 165 படகுகள் இன்னும் திரும்ப பெறப்படாமல் உள்ளது. அதனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகள் அளித்து உள்ளனர். இதனால் வழக்கு விசாரணை 3-வது நீதிபதியிடம் செல்கிறது. 3-வது நீதிபதி காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்பட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும். தீர்ப்புகளை நியாயமாகவும், நேர்மையாகவும் அளித்து மக்களுக்கு சட்டத்தின் மேல் உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், கொட்டிவாக்கம் முருகன், மாநில செயலாளர் சுகுமாறன், மைதிலி ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story