மூதாட்டியை தள்ளிவிட்டு 5½ பவுன் சங்கிலி பறிப்பு: போலீசார் விசாரணை


மூதாட்டியை தள்ளிவிட்டு 5½ பவுன் சங்கிலி பறிப்பு: போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Jun 2018 4:30 AM IST (Updated: 16 Jun 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மூதாட்டியை தள்ளிவிட்டு 5½ பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி 10-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராமன். இவருடைய மனைவி லட்சுமி(வயது76). இவர் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். கடையில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து முன்பக்க கதவை திறந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி சென்று லட்சுமியை கீழே தள்ளிவிட்டார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி 2 பேரும் தப்பி சென்றனர்.

உடனே திருடன்... திருடன்... என்று லட்சுமி சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரையும் விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். தள்ளி விட்டதில் காயம் அடைந்த லட்சுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து லட்சுமியின் மகன் இளவரசு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story