குழந்தையிடம் தங்க வளையலை திருடி நாடகமாடிய இளம்பெண் - கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
தக்கலை பஸ் நிலைய கடையில் குழந்தையிடம் தங்க வளையலை திருடி நாடகமாடிய இளம்பெண் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்.
பத்மநாபபுரம்,
தக்கலை பஸ் நிலையத்தில் பெண்கள் காத்திருப்பு அறை பகுதியில் ஒரு கடை உள்ளது. இந்த கடைக்கு எரிச்சமாமூட்டுவிளை பகுதியை சேர்ந்த இளம்பெண் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது அந்த கடையில் உரிமையாளரின் குழந்தை ஒன்று விளையாடியது. அந்த குழந்தையை இளம்பெண் தூக்கி வைத்து கொஞ்சுவது போல் நடித்தார். மேலும் குழந்தை அழகாக இருக்கிறது என்று குழந்தையின் தாயாரிடம் தெரிவித்தபடி இருந்தார்.
அந்த சமயத்தில், குழந்தையின் கையில் அணிந்திருந்த தங்க வளையல் ஒன்றை இளம்பெண் நைசாக திருடி தன்னுடைய உள்ளாடைக்குள் மறைத்து கொண்டார். மேலும், குழந்தையின் கையில் ஒரு வளையல் தான் உள்ளது. மற்றொன்றை காணவில்லை என்று அவரே தாயாரிடம் தெரிவித்து நாடகமாடினார்.
உடனே பதற்றமடைந்த கடைக்காரர்கள், நாலாபுறமும் தேடினர். தங்க வளையல் கிடைக்கவில்லை. இதற்கிடையே தங்க வளையலை திருடிய பெண்ணும் நைசாக சென்று விட்டார். இந்த நிலையில் கடையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவை கடைக்காரர்கள் பார்த்தனர்.
அதில், குழந்தையை தூக்கி கொஞ்சிய இளம்பெண், தங்க வளையலை திருடி உள்ளாடைக்குள் மறைத்து வைப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் தங்க வளையலை திருடி விட்டு நாடகமாடிய பெண் யாரென்று கண்டுபிடிக்க கடைக்காரர்கள் முடிவு செய்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான இளம்பெண்ணை காண்பித்து பஸ் நிலையத்தில் நின்ற டிரைவர்களிடம் விசாரித்ததில், அந்த பெண் எரிச்சமாமூட்டுவிளையை சேர்ந்த இளம்பெண் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணை கடைக்காரர்கள் பிடித்து தங்க வளையலை தரும்படி கேட்டனர். முதலில் திருடவில்லை என்று மறுத்த அவர், கண்காணிப்பு கேமரா காட்சிகளை தெரிவித்ததும் நான் தான் திருடினேன், என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

போலீசில் புகார் தெரிவித்தால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டலும் விடுத்தார். இதனால் கடைக்காரர்கள், தங்க வளையலை மட்டும் பெண்ணிடம் இருந்து வாங்கி விட்டு சென்று விட்டனர்.
தக்கலை பஸ் நிலைய கடையில் திருடிய பெண், தற்கொலை மிரட்டல் விடுத்ததால் கடைக்காரர்கள் போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை. அந்த பெண் மீது ஏற்கனவே திருட்டு புகார் இருப்பதாக தெரிகிறது. மேலும் தக்கலை பகுதியில் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில பெண்கள் நகை பறிப்பில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்களும் போலீசாருக்கு வருகிறது. எனவே போலீசார், அந்த பெண்ணை பிடித்து உரிய விசாரணை நடத்தினால் பல திருட்டு வழக்குகளில் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story