பெரியகுளத்தில் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.4 லட்சம் மோசடி


பெரியகுளத்தில் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.4 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 17 Jun 2018 3:30 AM IST (Updated: 17 Jun 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் உள்ள வங்கியில் போலி கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.4 லட்சம் மோசடி செய்த விவசாயியை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெரியகுளம்,

பெரியகுளம், வடகரை மகாத்மா காந்திஜி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 40). விவசாயி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30 பவுன் நகைகளை பெரியகுளம், வடகரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் அடகு வைத்து ரூ.4 லட்சம் பெற்று இருந்தார்.

இந்தநிலையில் பாலசுப்பிரமணியன், அடகு வைத்த நகைகளை திருப்பாமல் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து வங்கியில் இருந்து நகைகளை திருப்புமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் நகைகளை திருப்பவில்லை.

இதையடுத்து வங்கி அதிகாரிகள், அந்த நகைகளை சோதனை செய்தனர். அப்போது அது கவரிங் நகைகள் என்பதும், ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து வங்கி கிளை மேலாளர் மகிழ்சீனிவாசன் பெரியகுளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெரியகுளம் போலீசார், பாலசுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story