குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி மறியல், ஆர்ப்பாட்டம்
ஊத்துக்கோட்டை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரியவண்ணான்குப்பம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் எந்த ஒரு பொருள் வாங்க வேண்டுமானாலும் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தண்டலம் செல்ல வேண்டி உள்ளது. பெரிய வண்ணான்குப்பம்- தண்டலம் இடையே உள்ள சாலை அவ்வப்போது பெய்து வரும் மழையால் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. பெரியவண்ணான்குப்பம் கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள்.
இவர்கள் தத்தம் விளைபொருட்களை தண்டலம் கொண்டு சென்று அங்கிருந்து புறப்படும் பஸ்களில் ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்று வருகின்றனர்.
சாலை குண்டும் குழியுமாக மாறியதால் தகுந்த நேரத்தில் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை கோரிக்கை மனு அளித்தும் பயன் இல்லை. இந்த நிலையில் சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் நேற்று காலை தி.மு.க. கிளை செயலாளர் ஆனந்தன் தலைமையில் பெரியவண்ணான்குப்பம்- தண்டலம் சாலையில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Tags :
Next Story