மார்த்தாண்டம் அருகே கட்டிட தொழிலாளி குத்திக்கொலை - ரப்பர் தோட்டத்தில் பிணம் வீச்சு
மார்த்தாண்டம் அருகே கட்டிட தொழிலாளி குத்திக்கொலை செய்து ரப்பர் தோட்டத்தில் பிணத்தை மர்மநபர்கள் வீசி சென்றுள்ளனர்.
குழித்துறை,
கட்டிட தொழிலாளியை குத்தி கொலை செய்துவிட்டு, பிணத்தை ரப்பர் தோட்டத்தில் வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தேனாம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ் (வயது 48). கட்டிட தொழிலாளி. அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி தனது பிள்ளைகளுடன் பிரிந்து சென்றார். அதன்பின்பு ஸ்டான்லி ஜோன்ஸ் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
நேற்று காலையில் மார்த்தாண்டம் அருகே கழுவன்திட்டை ரெயில் நிலையம் அருகில் ஒரு ரப்பர் தோட்டத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்பட்டன.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஸ்டான்லி ஜோன்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், ஸ்டான்லி ஜோன்சை இரவில் மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, பிணத்தை ரப்பர் தோட்டத்தில் வீசிச் சென்றிருக்கலாம் என தெரிகிறது.
ஸ்டான்லி ஜோன்சுக்கு மது பழக்கம் இருந்ததாகவும், அதனால் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். மது போதை தகராறில்தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் பின்னணி உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கட்டிட தொழிலாளியை கொன்று பிணத்தை ரப்பர் தோட்டத்தில் வீசிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story