மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க கோரி கலெக்டரிடம் மனு
அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க கோரி தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 262 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
அரியலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், ஆண்டிமடம் பகுதியில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் பலர் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய கலெக்டராக இருந்த சரவணவேல்ராஜ் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்ட கனிம வள இயக்குனர் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்ட வெள்ளாற்று பகுதி, கள்ளிப்பாடி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி வந்தோம்.
தற்போது மணல் அள்ள தடை செய்யப்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட கலெக்டர், மீண்டும் மேற்கண்ட ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளாற்றில் சிலிப்பனூர், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளிலும், கொள்ளிடம் ஆற்றில் நாயகனைப்பிரியால், அண்ணாங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஏலாக்குறிச்சி தெற்கு தெருவில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், ஏலாக்குறிச்சி தெற்கு தெருவில் அங்கன்வாடி குழந்தைகள் நல மையம், ஓட்டல், ரைஸ்மில், கோவில்கள் உள்ளன. இந்நிலையில் குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் தனிநபர் மூலம் மிகப்பெரிய அளவில் கோழிப்பண்ணை அமைக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்படும் இந்த கோழிப்பண்ணையால், குடியிருப்பு பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் மக்களுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோழிப்பண்ணை அமைப்பதை தடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரான பாலாஜிக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story