குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை


குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 18 Jun 2018 9:45 PM GMT (Updated: 18 Jun 2018 8:27 PM GMT)

குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

குன்னத்தூர்,

குன்னத்தூர் பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்தும், பொன்காளியம்மன் நகரில் கடந்த 17 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்தும் குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு கட்சியின் ஊத்துக்குளி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊத்துக்குளி தாலுகா பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் குமார், பன்னீர்செல்வம், சின்னச்சாமி, சாவித்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி செயல்அதிகாரி உறுதி கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story