கோர்ட்டு வளாகத்தில் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து 2 பேர் கைது
விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்தபோது திருச்சி கோர்ட்டு வளாகத்தில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை கீழப்புதூர்ரோடு எடத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(வயது 30). சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த கவிதாவுக்கும் 2015-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இதையடுத்து கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் விவாகரத்து கேட்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருச்சி குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தாமரைச்செல்வன் திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில் விவாகரத்து வழக்கில் ஆஜராவதற்காக கவிதா தனது தம்பி நவீன் என்கிற நடராஜனுடன்(27) நேற்று காலை திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார். இதேபோல் தாமரைச்செல்வனும் தனது தந்தை ராஜேந்திரனுடன் வழக்கில் ஆஜராக வந்திருந்தார்.
கோர்ட்டு வளாகத்தில் முதல்மாடியில் நீதிமன்ற அறை முன்பு நின்று கொண்டு இருந்தபோது கவிதாவுக்கும், தாமரைச்செல்வனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்ட கவிதாவின் தம்பி நடராஜன் ஆத்திரம் அடைந்து தாமரைச்செல்வனை தாக்க முயன்றார்.
அப்போது அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் நடராஜனின் முகத்தில் சரமாரியாக குத்தி கிழித்தார். இதில் அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார். இதனை கண்ட வக்கீல்கள் சிலர் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தாமரைச்செல்வனை பிடித்து செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து செசன்ஸ்கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, தாமரைச்செல்வன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். திருச்சி கோர்ட்டு வளாகத்தில் நேற்று காலை நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story