திருச்செந்தூர் பஸ்நிலைய பகுதியில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபரால் பரபரப்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


திருச்செந்தூர் பஸ்நிலைய பகுதியில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபரால் பரபரப்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 20 Jun 2018 2:15 AM IST (Updated: 20 Jun 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பஸ்நிலைய பகுதியில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் பஸ்நிலைய பகுதியில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீக்குளிப்பு

திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் பகுதியில் உள்ள நூலகத்தின் அருகே நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சாக்குப்பைகளை கொண்டு அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆம்புலன்சு வர தாமதமானதால் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு ஒரு லோடு ஆட்டோவில் ஏற்றிச் சென்று திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அவரிடம் திருச்செந்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தனது பெயர் காதர், அம்பாசமுத்திரம் என கூறியுள்ளார். இதுதொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story