அனைத்து ஏரிகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

செங்கிப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டத்தில் கல்லணை அருகே உள்ள சானூரப்பட்டி, பாலையப்பட்டி, ஆச்சாம்பட்டி, புதுக்குடி, மணையேரிப்பட்டி, வெண்டயம்பட்டி, காங்கேயன்பட்டி, நந்தவனப்பட்டி, ஆவாரம்பட்டி, புதுப்பட்டி, செல்லப்பன்பேட்டை ஆகிய ஊராட்சிகள் மற்றும் இந்த ஊராட்சிகளுடன் இணைந்த குக்கிராமங்கள் அடங்கிய செம்மண் பூமியாக செங்கிப்பட்டி பகுதி உள்ளது. செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு புதிய கட்டளை மேட்டுக்கால்வாய், உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய் ஆகிய கால்வாய்களின் வழியாக தண்ணீர் பெறப்பட்டு ஏரிகளை நிரப்பி ஒருபோக நெல் சாகுபடி செய்யப்படும். அக்னியாறு கோட்டத்தின் கீழ் உள்ள ஏரிகள் முழுவதும் மழையை மட்டுமே நம்பி விவசாயம் நடைபெறும் பகுதி ஆகும்.
கடந்த 7ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததாலும், கட்டளை, உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய்களில் தண்ணீர் முறையாக கிடைக்காததாலும் விவசாயம் முற்றிலும் பொய்த்து போனது. இதனால் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் ஏரிகள் அனைத்தும் புதர்கள் மண்டி தூர்ந்து போய் உள்ளன. திருச்சியை தலைமையிடமாககொண்டு செயல்படும் பொதுப்பணித்துறை ஆற்று பாசன கோட்டத்தின் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மூலம் 61 ஏரிகள் பாசன பரப்பில் உள்ளன. இதைப்போல உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய் வழியாக பாசனம்பெறும் 16 ஏரிகள் உள்ளன. பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்னியாறு கோட்டத்தின் கீழ் 13 ஏரிகள் உள்ளன. அதன்படி மொத்தம் பொதுப்பணித்துறை பாசன பரப்பில் 90 ஏரிகள் உள்ளன. மேலும் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 29 ஏரிகள் உள்ளன.
செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தையும் தூர்வாரி ஆழப்படுத்தி கரைகளை உயர்த்தி மதகுகளை சீரமைத்தால் ஏரிகள் ஒருமுறை நிரப்பினாலே ஒருபோக சாகுபடி செய்ய இயலும். மேலும் பொதுப்பணித்துறை தலைமை திருச்சியில் இருப்பதால் திருச்சியில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், செங்கிப்பட்டி பகுதி ஏரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் இனியும் காலதாமதம் செய்யாமல் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி ஆழப்படுத்தி கரைகளை உயர்த்தி மதகுகளை சீரமைக்க வேண்டும். புதியகட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய்களை தலைப்பில் இருந்து தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story