போலி கையெழுத்திட்டு பெண்ணின் வங்கி கணக்கில் மோசடி கொழுந்தனார், வங்கி மேலாளர் மீது வழக்கு


போலி கையெழுத்திட்டு பெண்ணின் வங்கி கணக்கில் மோசடி கொழுந்தனார், வங்கி மேலாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Jun 2018 3:30 AM IST (Updated: 21 Jun 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

போலி கையெழுத்திட்டு பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.15½ லட்சம் மோசடி செய்த கொழுந்தனார், வங்கி மேலாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் கஸ்வான் (வயது 47). இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தனது மனைவி பெயரில் வியாபாரத்துக்காக கணக்கு வைத்துள்ளேன். வங்கியில் பணம் போடுவது மற்றும் எடுப்பது உள்ளிட்ட வரவு செலவுகளை மேற்கொள்ள எனது தம்பி மோகன்லால் கஸ்வானை உதவிக்கு வைத்து இருந்தேன். பின்னர் அவரை பல்வேறு காரணங்களால் வேலையில் இருந்து நிறுத்திவிட்டேன். இந்தநிலையில் எனது தம்பி, மனைவியின் கையெழுத்தை போட்டு வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சத்து 61 ஆயிரத்து 650 எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக போலீசார் மோகன்லால் கஸ்வான் மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த வங்கியின் மேலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story