தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வராது அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
2021-ம் ஆண்டுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வராது என புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஜெயக் குமார் பேசினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, தலைமை கழக பேச்சாளர் வேதை சிவசண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், அ.தி.மு.க.வில் மட்டும்தான் கட்சி கொடி கட்டும் தொண்டர் தேசிய கொடி கட்டிய காரில் பயணம் செய்ய முடியும்.
ஜெயலலிதா இறந்த பிறகு மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என பல்வேறு நாடகங்களை நடத்தியுள்ளார். சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
2021-ம் ஆண்டு தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அதற்கு முன்பு சட்டமன்ற தேர்தல் வராது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்தவுடன் நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் நாளைக்கு வந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் 2021-ம் ஆண்டு வந்தாலும் சரி அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுக்கோட்டை நகர வங்கி தலைவர் மாரிமுத்து வரவேற்றார். முடிவில் நகர துணை செயலாளர் மலர்விழிமுத்து நன்றி கூறினார்.
அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட இந்த ஆட்சியை டி.டி.வி. தினகரன் கலைக்க முயற்சி செய்கிறார். டி.டி.வி. தினகரன் ஜெயலலிதாவிற்கும், அ.தி.மு.க.விற்கும் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளார்கள் என்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தை ஏற்க முடியாது. மக்கள் நீதிமய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்கலாம். ஆனால் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தங்க.தமிழ்ச்செல்வன் விமர்சிப்பது நீதிமன்ற பார்வைக்கு சென்று உள்ளது. இதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Related Tags :
Next Story