புதிதாக அமைய உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
புதிதாக அமைய உள்ள விமான நிலையத்திற்கு, விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து மனு அளித்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரில் புதிதாக விமான நிலையம் அமைய உள்ளதாக செய்தி வெளியானதையொட்டி செய்யூர் அருகே உள்ள அரப்பேடு, அய்யங்குளம், கொளத்தூர், மேட்டுத்தெரு கொளத்தூர், இங்களூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.
நாங்கள் இந்த பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். இந்த பகுதியில் உள்ள நிலத்தில் ஆடு, மாடுகளை மேய்த்து தொழில் செய்து வருகிறோம். இந்த இடத்தில் விமான நிலையம் வந்தால் ஆடு மாடுகளை மேய்க்க முடியாது. இதனால் சுமார் 50 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இந்த இடத்தில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story